தூத்துக்குடி. கடந்த 4 நாட்களாக பெய்த கன மழையால் தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், குறிப்பாக ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு பகுதியில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பெரும் அவதிப்பை ஏற்படுத்தியது.
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெயபால் மாநகராட்சி மண்டல நிர்வாகத்திற்கு மனு அளித்து, “முழுமையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் நமது வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கும் முந்தைய புகாருக்கும் மண்டல அலுவலகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.
இதுகுறித்து தகவல் தெரிந்து கொண்ட ஆணையர் ப்ரியங்கா உடனடியாக நடவடிக்கை எடுத்தார். ராஜீவ் நகர் வடக்கு பகுதிக்கு மண்டல அலுவலக அதிகாரிகள் குழுவை அனுப்பி, ராட்ஷச மின் மோட்டார் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணியை முன்னெடுத்தார். பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக வெளியே செல்ல முடியாமல் அவதியுற்ற நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டது.
இதன் மூலம் அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் அதிகாரிகள் குழுவிற்கு நன்றியை தெரிவித்தனர். பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அமைப்பின் தலைவர் எஸ்.பி.மாரியப்பன், அதிரடி நடவடிக்கைக்கும் ஆணையர் ப்ரியங்காவிற்கும் பாராட்டுப் பிரதி தெரிவித்தார்.
தூத்துக்குடி
குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் அகற்றம்: ஆணையர் ப்ரியங்கா அதிரடி நடவடிக்கை – பொதுமக்கள் நன்றியுடன் பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மழைக்கால முன்னேற்பாடு ஆலோசனை!!
அடுத்த
மழைநீர் மக்களைக் சிரமப்படுத்தாதபடி, அமைச்சர் நேரடியாக களத்தில்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026