மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையிலும், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள் முன்னிலையில், மதிமுக நிர்வாகிகள் கணேஷ் நகரிலுள்ள அமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தனர்.

அங்கு, அமைச்சருக்கு பாரம்பரிய மரியாதையாக பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நிகழ்வில் பலரும் பங்கேற்று வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.