தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் கு. காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தளபதியார் ஆணைக்கிணங்க, கழகத்தின் பொதுச் செயலாளர் N. ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் M.Sc,. B.Ed, தலைமையில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் விவரம் தருவைரோடு இந்து அரிசன தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

தெப்பக்குளம் தெரு சி.எம் உயர்நிலைப்பள்ளியில், மாணவ மாணவியர் அமர்வதற்கு, பாய்கள் மற்றும் நோட் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

ரெங்கநாதபுரம் சி.எம் தொடக்கப்பள்ளியில் சுமார் 200 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Holy Cross Special School மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மேலும், தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் திருவுருவச் சிலை,
காமராஜர் மார்க்கெட் திருவுருவச் சிலை, பழைய மாநகராட்சி திருவுருவச்சிலை, கிருஷ்ணராஜபுரம் பகுதி திருவுருவச்சிலை, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, குலைலையன்கரிசல் பகுதி திருவுருவச்சிலை, ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி, தருவைக்குளம் பகுதி திருவுருவச்சிலை, 3 வதுவார்டு K.T.C நகரில், அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படம், 20வது வார்டு TMC காலனியில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படம், அரசு மருத்துவமனை பின்புறம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படம், பக்கிள்புரம் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படம், சண்முகப்புரம் மெயின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படம், பிரையண்ட் நகர் மெயின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படம், பிரையண்ட் நகர் காமராஜர் பேரவை சார்பில், அலங்கரிக்கப் பட்ட திருவுருவப் படம், டூவிபுரம் மற்றும் அண்ணா நகர் ஜங்ஷன் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணி T. சவேரியார்புரம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, மாப்பிள்ளையூரணி  தாளமுத்து நகர் மெயினில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி புதியம்புத்தூர் பகுதியில், அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படம், தூத்துக்குடி சிவன் கோவில் அருகில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ ப்படம், முத்தையாபுரம் மெயின் பஜாரில் அலங்கரிக்கப் பட்ட திருவுருவப் படம், ஆகிய இடங்களில் காமராஜரின் திருவுருவச் சிலைக்கும், திருவருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், முள்ளக்காடு ராஜூவ் நகர் பகுதியில் காமராஜரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சுமார் 24 இடங்களில் பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக தவெக சார்பில் கொண்டாடப்பட்டது.