கர்மவீரர், பெருந்தலைவர், பாரத ரத்னா காமராஜரின் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் முழு திருவுருவச் சிலைக்கும், பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மார்பளவு சிலைக்கும், வ‌.உ.சி மார்க்கெட் முன்பு அமைந்துள்ள முழு திருவுருவ சிலைக்கும் இன்று காலை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தமிழ்நாடு காமராஜர் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியான சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

V.V.D மெயின் ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட பெருந்தலைவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தபின் இனிப்புகள் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பிரையன்ட் நகர் 1 வது தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்ட பெருந்தலைவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தபின் இனிப்புகள் வழங்கினார்.

30 வது வார்டு பாஜக நிர்வாகி காசிராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அசைவ உணவு வழங்கினார்.

இந்த விழாவில் கழக வர்த்தக அணி துணை செயலாளர் மில்லர் R.L. ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங் தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை எம்.ஜி‌ஆர் மன்ற இணை செயலாளர் ஜோதிமணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் M.C.P. ஜீவா பாண்டியன் வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P.T.R. ராஜகோபால் தூத்துக்குடி மாவட்ட  மீனவணி துணை தலைவர் டெலஸ்பர் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அகஸ்டின் Ex.MC முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் Ex.M.C, Ex.மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ் Ex.M.C முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ரயிவே மாரியப்பன் மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன் முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன் முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம் வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் ஜெனோபர் சுயம்பு அருண்குமார் அந்தோனி ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் அசரியான் சாந்தி முன்னாள் வட்ட செயலாளர் அன்பு லிங்கம் திருமணி பாபநாசம் ஜெகதீஸன் பாக்யராஜ் வெலிங்டன் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் சங்கர் ராஜேந்திரன் பேச்சியப்பன் தெர்மல் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரவிக்குமார் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் பிரபாகரன் அபுதாஹிர் மற்றும் ஸ்டாலின் சிம்மம் ராஜ் குமார் மகாராஜன் சந்தன ராஜ் சேவியர் முனியசாமி ஆபிரகாம் ஆறுமுகம் மணிகண்டன் ராஜசேகர் அந்தோனி ராஜ் சித்திரைவேல் சிவசாமி பெருமாள் சுப்புராஜ் மகளிர் அணியினர் ஜிபுலியா பபினாம்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.