ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தில் வைத்து சிங்கத்தாக்குறிச்சி, பூவாணி, ஆலந்தா வடக்கு காரசேரி கிராம ஊராட்சி மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்தும் அரசால் வழங்கப்படும் சேவைகள் குறித்தும் கேட்டறிந்து முகாமில் உடனடியாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இரண்டு நபர்களுக்கும் திருத்த ஆணையை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் பென்னட் ஆசிர் மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி தாசில்தார் ரத்தினாசங்கர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லிங்கராஜ், பி.டி.ஓ.பழனிச்சாமி மின்வாரிய செயற்பொறியாளர் சின்னத்துரை வட்ட வழங்கல் அலுவலர் சகிலா ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி கிளைச் செயலாளர் அய்யப்பன் மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
