தூத்துக்குடி மாநகராட்சி 45வது வார்டு, கட்டபொம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த தெய்வத்திரு. நடராஜன் நாயக்கர் (தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்) முன்னாள் மாவட்டத் தலைவர் அவர்களின் மனைவியும், திரு. முருகன் (ஓய்வு – அரசு போக்குவரத்து கழகம்) திரு. சிவசுப்பிரமணியன் (எ) கல்யாணி (45வது வட்ட திமுக பிரதிநிதி) மற்றும் திரு. செண்பக ராஜ் (பொதுக்குழு உறுப்பினர் – அரசு போக்குவரத்து கழகம்) ஆகியோரின் தாயாரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் சரவணப்பெருமாள் மற்றும் வடக்கு மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் மாமியாருமான சந்தண மாரி அவர்கள் அன்று (23.10.2025) மதியம் 1.00 மணியளவில் இயற்கை எய்தினார்.
தாயார் சந்தண மாரி அவர்களின் இறுதி சடங்கு நாளை (24.10.2025) காலை 10.00 மணியளவில் கட்டபொம்மன் நகர் 12வது தெரு மேற்கு அவர்களின் இல்லத்தில் நடைபெறுகிறது.
அன்னாரது மறைவு செய்தி அறிந்த உடன் தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் திரு. ஆர்.எஸ். ரமேஷ் மற்றும் மதிமுக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் திரு. விநாயக ரமேஷ் ஆகியோர் நேரில் சென்று மறைந்தவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மக்கள் மத்தியில் நல்ல பண்பும், அருளும், சமூக அக்கறையும் கொண்டவராக அனைவராலும் மதிக்கப்பட்ட சந்தண மாரி அவர்களின் மறைவு தூத்துக்குடி சமூகத்தினரிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தெய்வத்திரு. நடராஜன் நாயக்கர் மனைவி சந்தண மாரி மறைவு – தூத்துக்குடி மாவட்ட மதிமுக மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கட்டபொம்மன் நகர் தெய்வத்திரு. நடராஜ் நாயக்கர் மனைவி சந்தண மாரி மறைவு – அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் தெய்வத்திரு. நடராஜன் நாயக்கர் மனைவி சந்தண மாரி மறைவு – தூத்துக்குடி மாவட்ட மதிமுக மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026