தூத்துக்குடி மாநகராட்சி 45-வது வார்டு கட்டபொம்மன் நகர் பகுதியில் வசித்து வந்த தெய்வத்திரு. நடராஜன் நாயக்கர் (தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் முன்னாள் மாவட்ட தலைவர்) அவர்களின் மனைவியும், திரு. முருகன் (அரசு போக்குவரத்து கழகம் ஓய்வு பெற்ற ஓட்டுநர்), திரு. சிவசுப்பிரமணியன் (எ) கல்யாணி (45-வது வட்ட திமுக பிரதிநிதி), மற்றும் திரு. செண்பக ராஜ் (அரசு போக்குவரத்து கழகம் பொதுக்குழு உறுப்பினர்) ஆகியோரின் தாயுமான சந்தணமாரி அவர்கள் இன்று மதியம் 1.00 மணியளவில் இயற்கை எய்தினார்.
அன்னாரது இறுதி சடங்கு நாளை (24.10.2025) காலை 10.00 மணியளவில் கட்டபொம்மன் நகர் 12-வது தெரு மேற்கு, அவர்களது இல்லத்தில் வைத்து நடைபெறுகிறது.
இவரது மறைவு செய்தி அறிந்த உடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று அன்னாரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, துயரத்தில் ஆழ்ந்திருந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அன்னாரின் மறைவுக்கு உறவினர்கள், நண்பர்கள், அரசுப் போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
கட்டபொம்மன் நகர் தெய்வத்திரு. நடராஜ் நாயக்கர் மனைவி சந்தண மாரி மறைவு – அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கனமழையில் சேதமான கதிர்வேல் நகர் சாலை – பொதுமக்கள் கோரிக்கைக்கு உடனடி பதில் – நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!
அடுத்த
தூத்துக்குடியில் தெய்வத்திரு. நடராஜன் நாயக்கர் மனைவி சந்தண மாரி மறைவு – தூத்துக்குடி மாவட்ட மதிமுக மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026