தூத்துக்குடியில் உள்ள தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலகத்தில் இன்று மாவட்ட அலுவலர் கணேசன் செய்தியாளரை சந்தித்தார்.
மாவட்ட அலுவலர் கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :-
தூத்துக்குடி மாவட்ட அலுவலராக பதவி ஏற்றி உள்ளேன். தூத்துக்குடி மாவட்டம் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதி, கெமிக்கல்கள் தொழிற்சாலைகளும் அதிகம் உள்ளது. மிகப்பெரிய கப்பல் துறைமுகம் உள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்கள் இயங்கி கொண்டு வருகிறது.
ஓட்டப்பிடாரத்தில் புதிதாக ரூ. 2.45 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. கடந்த வருடம் அமைச்சர்களின் முயற்ச்சியில் ஏரல் பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அரசு இடம் ஓதுக்கீடுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
உடன்குடியில் தமிழக அரசால் துவங்கப்பட இருக்கின்ற 1300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையம் அருகிலும் புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உடன்குடியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கு கோரிக்கை வைத்த நிலையில் இயக்குனரின் அனுமதி கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு நிலையங்களில் 53 தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
முதல்வரின் அனுமதியோடு மூன்று மாதங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமையப்பட இருக்கிறது. தூத்துக்குடியில் 233 தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் உள்ளனர். கோடைகாலம் என்பதால் அதிக தீ விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். விபத்துகள் ஏற்படும் போது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயில் காலம் என்பதால் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாரம் சம்மந்தமான எலக்ட்ரிக்கல் பொருட்கள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, போன்றவைகளை பழுது நீக்கி சரியான முறையில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் குப்பைகளை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். புகை பழக்கம் உள்ள நபர்கள் புகை பிடித்தவுடன் அவற்றை பொது இடங்களில் வீசுவதை தவிர்க்கவேண்டும்.
ஏதேனும் தீ விபத்து மற்றும் பிற விபத்துகள் ஏற்பட்டால் பொதுமக்கள் 101, 112 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். விபத்துகள் தடுப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கணேசன் செய்தியாளர் சந்திப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொதுமக்கள் பிரச்சினைகளை உடனே நிறைவேற்ற மதிமுக சார்பில் அவைத்தலைவர் பேச்சி ராஜ் தலைமையில் மனு!!
அடுத்த
2024 - 2025ம் ஆண்டு (ஏப்ரல் மாதம் வரை) தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலிடம்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026