கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 89ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் க. பெருமாள் சாமி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி அவர்கள் மலர்மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், பழங்குடியினர் பிரிவு மாநிலச் செயலாளர் முனியசாமி, மாவட்ட பொது செயலாளர் இக்னேஷியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ் ரூஸ்வெல்ட், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், எஸ்.சி/எஸ்.டி பிரிவு முன்னாள் தலைவர் ராஜாராம், AICWC மாவட்டச் செயலாளர் சம்சுதீன், INTUC-யின் மனோகரன், முருகேசன், சேகர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் தனலட்சுமி, மாவட்ட துணைத் தலைவி இசக்கியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் வழக்கறிஞர் செல்வம், காமராஜ், நெல்சன், மாரியப்பன், சாமுவேல், ஆனந்தராஜ், முத்துராஜ், ஐஎன்டியூசி சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், கிரிதரன், பாலன் ஆகியோரும், ஏராளமான தேசியத் தோழர்களும் கலந்து கொண்டு கப்பலோட்டிய தமிழனின் தியாகச் சேவையை நினைவு கூர்ந்தனர்.
தேசபக்தி, தியாகம், தொழிலாளர் நலனில் வ.உ.சிதம்பரனார் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சி மரியாதை மற்றும் பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
தூத்துக்குடி
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் மரியாதை நிறைந்த மலரஞ்சலி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தியாகத் தமிழனுக்கு மரியாதை— ஒட்டப்பிடாரத்தில் PTR அமைச்சர், எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
வ.உ. சிதம்பரப்பிள்ளை தகனம் நடைபெற்ற நினைவிடத்தில் இந்து முன்னணி சார்பில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026