தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த குருசாமி மகன் மாரிமுத்து (45) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. சுரேஷ் அவர்கள் இன்று (14.03.2025) குற்றவாளியான மாரிமுத்து என்பவருக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்குஅரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா அவர்களையும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. முத்துலட்சுமி அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் திருமதி. ரபிலாகுமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி : பாலியல் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தொழில் நிறுவனங்களுக்கு காவல்துறை கொடுத்து மெஸேஜ்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு தூய்மை பணியாளர்களும் ஒரு காரணம் - மேயர் சொன்ன தகவல்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026