தூத்துக்குடி ராஜபாளையம் புனித பிலோமினா மால் ஆலயம் 67 ம் ஆண்டு திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது. திருவிழா (29.08.2025) வெள்ளிக்கிழமை துவங்கி (07.09.2025) ஞாயிற்றுக்கிழமை திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவின் முதல் நாள் நிகழ்வான மாலை ஐந்து முப்பது மணிக்கு ஜெபமாலையுடன் ஆரம்பமாகியது ஆறு மணிக்கு புனித பிலோமினம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

மாலை திருப்பலிக்கு அருட்தந்தை டோமினிக் அருள்வளவன் மறை மாவட்ட முதன்மை குரு சிப்பிக்குளம் அவர்கள் தலைமையில் அருட்தந்தை குழந்தை ராஜ் சவேரியார்புரம் பங்கு தந்தை அவர்கள் மறைவு உரையாற்றினார்கள். தாளமுத்து நகர் பங்குத்தந்தை பிரான்சிஸ் வசந்தன் திருப்பலிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
திருவிழாவில் தினமும் மாலை 6 மணியிலிருந்து ஆறு முப்பது மணி வரை ஜெபமாலை நடைபெறும் தொடர்ந்து நவநாள் திருப்பலி நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் திருவிழா (06.09.2025) சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பலி அருட்தந்தை ப்ரோகிரஸ் பங்குத்தந்தை சவேரியார்புரம் தலைமையில் அருட்தந்தை விஜயன் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மங்களகிரி மறைவுரையாற்றுகிறார்கள். 
திருப்பலியை சிறப்பிப்பவர்கள் முதல் திரு விருந்து பெரும் குழந்தைகள் 7.00 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை மரிய அரசு பங்குத்தந்தை எம். சவேரியார்புரம் தலைமையில் அருட்தந்தை பிரதீப் மறை மாவட்ட பொருளாளர் மறைவு உரையாற்றுகிறார்கள் ராஜபாளையம் ஊர் மக்கள் திருப்பலியை சிறப்பிக்கின்றார்கள்.
அதைதொடர்ந்து இரவு 9 மணிக்கு புனித பிலோமினம்மாள் சுருபத்துடன் தேர் பவனி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் திருவிழா (07.09.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு ஜெபமாலை உடன் ஆரம்பமாகிறது. 7 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி அருட்தந்தை சகாய ஜோசப் ஆன்மீக குரு சிறுமலர் குறுமடம் அவர்கள் தலைமையில் அருட்தந்தை ஜோசப் ஸ்டாலின் தென் மண்டல பங்குகளின் கண்காணிப்பாளர் மறைவு உரை யாற்றுகிறார்கள்.
தொடர்ந்து மாலை ஐந்து முப்பது மணிக்கு நற்கருணை ஆசீர் அருட்தந்தை பிரான்சிஸ் வசந்தன் தாளமுத்து நகர் பங்கு தந்தை தலைமையில் நடைபெறுகிறது. திருவிழாவில் ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் இறை மக்கள் திரு இருதய அருள் சகோதரிகள் ஆகியோர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
