தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் கூட்டமானது இன்று (30.08.2025) காலை 10 மணியளவில் சங்க மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் தலைமையில் பால விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.



கூட்டத்தில் டிரஸ்ட் உறுப்பினர்கள் திருவாளர்கள் கோவிந்தசாமி, ரெங்கசாமி, மோகன், ரமேஷ், செல்ல சாமி, வெங்கட கிருஷ்ண ராஜன், ராஜா காந்தி, குப்புசாமி, ஜெயக்குமார் மற்றும் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சங்க டிரஸ்ட் பணத்தில் திருமண மண்டபம் கட்டுவதற்கு இடம் வாங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் செயலாளரும், டிரஸ்ட் உறுப்பினருமான ரெங்கசாமி யின் செயல்பாடுகளை பாராட்டி டிரஸ்ட் உறுப்பினர்கள் சார்பாக மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் ரெங்கசாமிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப் படுத்தினார்.

டிரஸ்ட் உறுப்பினர் மோகன் இணை மேனேஜிங் டிரஸ்டியாக தேர்வு செய்யப்பட்டார். கூட்ட முடிவில் ராஜா காந்தி நன்றியுரை நிகழ்த்தினார்.