தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சில பிரிவுகள் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட சூழ்நிலையை நேரில் அறிந்து கொள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேற்று இரவு (24.11.2025) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையின் உள் பிரிவுகள், நோயாளிகள் சந்திக்கும் சிரமங்கள், நீர்த் தேக்கம் மற்றும் தேவையான உடனடி சீரமைப்பு பணிகள் குறித்து மருத்துவர்களிடம் கனிமொழி கருணாநிதி விசாரித்தார். மேலும், மழை காரணமாக ஏற்படும் அவசர தேவைகளை உடனடியாக தீர்க்க தேவையான அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.
அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மழை பாதிப்பு: கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக மகளிர் அணியின் அர்ப்பணிப்பு தலைவி ராஜம் ஜான் மறைவு: கனிமொழி கருணாநிதி நேரில் அஞ்சலி!!
அடுத்த
தூத்துக்குடி பி&டி காலனியில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் வேகப்படுத்தல் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026