தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி தலைவரும், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளருமான உங்கள் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள “ஜன நாயகன்” திரைப்படம் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன், கழகப் பொதுச் செயலாளர் N. ஆனந்த் Ex.MLA அவர்களின் ஆலோசனைப்படி கழக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, மாநில துணைப் பொதுச் செயலாளர் M. சுபத்ரா முருகன், மத்திய மாவட்ட செயலாளர் SDR. சாமுவேல் ராஜ் ஆகியோர் தலைமையில் கழக நிர்வாகிகள் சிவன் கோயில், பனிமய மாதா கோயில் மற்றும் பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு சென்று, “ஜன நாயகன்” திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால்போஸ்டர்களை வைத்து இறைவனை வழிபட்டு வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும் 2019–2020 ஆம் ஆண்டின் லயன்ஸ் ஆளுநருமான லயன் JKR. ஜெ. முருகன் BBA, தொழிலதிபர் கிஷோர், இணைச் செயலாளர் கோல்டன், துணைச் செயலாளர் மரியா, பொருளாளர் சிவகுமார், செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், வர்த்தக அணி அபிநயா கிருஷ்ணமூர்த்தி, மாரிஸ், சுரேஷ், வார்டு செயலாளர் ரமேஷ், மதன், திவாகர், அண்டோ, மனமுத்து, ஜெர்மன், நிர்வாகி கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த வழிபாடு, “ஜன நாயகன்” திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியதாக கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.