தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு, கல்வி மற்றும் இணைப்பாட செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


விழாவில் உரையாற்றிய மார்கண்டேயன், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களின் திறமைகளை முழுமையாக வளர்த்துக்கொண்டு, கல்வி, விளையாட்டு, கலை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என ஊக்கமளித்தார். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், மாணவர்களின் எதிர்காலம் நல்ல முறையில் அமைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி ஆதிசங்கர், ஒன்றிய துணைச் செயலாளர் காளிராஜ்பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், ஆசிரிய–ஆசிரியைகள், மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.