இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தூத்துக்குடி 1-வது கேட் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, மேற்கு மண்டல பொறுப்பாளர் ஜான் சாமுவேல், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், புல்டன் ஜெசின், மாவட்ட துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், ராஜாராம், மாவட்ட செயலாளர் இக்னேசியஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், எஸ்.சி. துறை பிரபாகரன், மீனவர் காங்கிரஸ் துறை சிமியோன், மாநில பேச்சாளர் பார்த்திபன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரென்னிஸ் பாபு, முருகன், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் இசக்கியம்மாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாரியப்பன், செய்யது அலி, கலைப்பிரிவு செயலாளர் மாரியப்பன், வார்டு தலைவர்கள் காமராஜ், மகாலிங்கம், ரதன், சுரேஷ்குமார் மற்றும் வார்டு நிர்வாகிகள் அகஸ்டின், பொன் சுதாகர், ஜெய பாண்டியன், செல்வராஜ், சகாயராஜ் உள்ளிட்ட மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையிலும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஜனநாயக மாண்புகளை போற்றும் வகையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.