தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாநில தீர்மானக் குழு உறுப்பினர் பேச்சிராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.எல்.எப் மாநில பொருளாளர் கஜேந்திரன், தூத்துக்குடி அனல் மின் திட்ட எம்.எல்.எப் தலைவர் காசிராஜன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஆண்டாள், மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மகாராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.