தூத்துக்குடி, அக். 29 மனிதநேயம் மிக்க பணியை தொடர்ந்து செய்து வரும் “ALL CAN TRUST” அமைப்பு சார்பில், தெருவோரங்களில் உணவு இல்லாமல் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் “ALL CAN FEED THE NEEDY” எனும் 226வது சேவை நிகழ்ச்சி இன்று (29.10.2025) புதன்கிழமை மதியம் 1 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தூத்துக்குடி Delight Public School நிறுவனத்தின் இணை ஆதரவுடன் சிறப்பாக நடைப்பெற்றது. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ALL CAN TRUST அமைப்பின் நிறுவனர் லயன் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் உணவு தேவையுள்ள மக்களுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டது. சமூக சேவையில் சிறந்து விளங்கும் Lions Tuticorin Kings உறுப்பினர்கள் மற்றும் Delight Public School ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் நோக்கம் — “பசியை போக்குவது மனித நேயத்தின் உயர்ந்த செயல்” என்ற கருத்தை சமூகத்தில் பரப்புவதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
பசியோடு யாரும் இருக்கக்கூடாது – ALL CAN TRUST 226வது மனிதநேயம் நிறைந்த செயல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ – தருவைகுளம் ஊரணியில் வடிகால் அமைக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டார்!!
அடுத்த
தூத்துக்குடி பிரதான சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைப்பு பணிகள் நிறைவு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026