ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் அக்காநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சிநிதி திட்டத்தின் கீழ் ரூ.119.59 லட்சம் மதிப்பீட்டில் நான்கு புதிய வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டிடம் அமைக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இக்கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அக்காநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் மரியஜான், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அரவிந்த், முன்னாள் மாநகராட்சி செயற்பொறியாளர் ரங்கநாதன், கன்னியாகுமரி மாவட்ட வளங்கள் அலுவலர் புஷ்பா, வட்டாட்சியர் சுடலைமணி, கிராம நிர்வாக அலுவலர் ஜவஹர், ஊராட்சி செயலாளர் ராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி, இளைஞரணி உறுப்பினர்கள் மகேஷ், ஆகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் அக்காநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய கட்டிடங்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பெண்கள் பாதுகாப்பு – இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்!
அடுத்த
தூத்துக்குடியில் புதிய இஎஸ்ஐ மருத்துவமனை – கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026