கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பரணி மீடியா சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதியம்புத்தூர் M.C. கனி மஹாலில் சிறுவர் சிறுமியர் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள், கோலப் போட்டி, நடனப் போட்டி மற்றும் சமையல் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.



ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில்  வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில்

பரணி மீடியா நிறுவனர் காந்தி கண்ணன் திரைப்பட நடிகை ஜானகி தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் மாவட்ட சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஒன்றிய ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி கிளைச் செயலாளர் பாலமுருகன் புதியம்புத்தூர் பாஸ்கர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.