ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குலசேகரநல்லூர் கிராமத்தில் வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாக சென்று சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா பொதுமக்களை நேரில் சந்தித்து கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.


தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மயான பாதை உள்ளிட்ட தேவைகளை கோரிக்கைகளாக  பொதுமக்கள் தெரிவித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி விரைந்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

மேற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் லட்சுமணன்
மாவட்ட பிரதிநிதி கண்ணன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர்.