தூத்துக்குடியில் முத்து உதவும் கரங்கள் நடத்திய 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவானது விவிடி சிக்னல் அருகில் உள்ள கிரசன்ட் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நேற்று மாலை (19.07.2025) நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி சிதம்ப நாதன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினார்கள்.
சிறப்பு பேச்சாளராக Dr. கார்த்திகேயன் (உதவி பேராசிரியர் அமெரிக்கன் காலேஜ் மதுரை) மற்றும் மும்தாஜ் பேகம் (முதல்வர் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) ஜாமியா பள்ளிவாசல் இமாம் அல்ஹாஜ் அப்துல் அலிம் ஹஜ்ரத் ஆகியவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கிரசன்ட் பள்ளி செயலாளர் முகம்மது உவைஸ் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் நமது 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் S. மும்தாஜ் புதல்வி S. தஹ்ஷின் முத்து உதவும் கரங்கள் நிர்வாகத்தினர்களால் CS Professional Final Group 1 தேர்வை வெற்றிகரமாக முடித்ததற்காக விருது வழங்கி கௌரிக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
விழாவில் முத்து உதவும் கரங்கள் தலைவர் பைசர் வரவேற்புரை நிகழ்த்தினார், செயலாளர் ஹாஜி. சாகுல் சிராஜுதீன் நன்றியுரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை துணைத் தலைவர் ஹாஜி முஹம்மது சுலைமான், துணைச் செயலாளர் முஜாஹித் அலி பொருளாளர் A. ஜாபர் சாதிக் முன்னாள் தலைவர்கள் பாவஸ், இப்ராஹிம், உறுப்பினர்கள் ஆஷிக், ஹாரிஸ், அமீர் பில்டர் காதர், ஜம் ஜம் மூசா, LG. உசேன் சிறப்பாக செய்திருந்தனர்.
