தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் மக்கள் சிரமப்படாமல் இருக்க மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
முத்துகிருஷ்ணா நகர், அன்னை தெரசா நகர், கதிர்வேல் நகர் போன்ற பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வடிகால் வழியாகவும் மின் மோட்டர் அறைகள் மூலமாகவும் சரியான முறையில் வெளியேறுகின்றதா என்பதை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேவையான பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
புறநகர் பகுதிகளில் இருந்து வெள்ளநீர் நகருக்குள் நுழையாமல் தடுப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் அமைந்துள்ள ஓடையைப் பார்வையிட்டு நீர் ஓட்ட நிலைமையை மதிப்பீடு செய்தார். “புறநகரிலிருந்து எந்த உபரி நீரும் நகருக்குள் வரவில்லை; நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது” எனவும் தெரிவித்தார்.
நகரின் பல பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் விரைவாக அகற்றப்பட்டு வருவதற்காக மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். மழை தொடர்பான எந்த பிரச்சினைக்கும் மக்கள் 1800 203 0401 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நகர மக்கள் நிம்மதியாக உறங்கிய நேரத்தில், “எவ்வளவு மழை பெய்தாலும் தூத்துக்குடியில் நீர் தேங்க விடமாட்டோம்” என்ற உறுதியுடன் மேயர் ஜெகன் பெரியசாமி இரவும் பகலும் தளத்தில் செயல்பட்டு வந்தார்.
மக்களை பாதுகாப்பதில் அயராது உழைக்கும் மேயரின் முயற்சிகள் நகரமக்களிடையே பெரிய பாராட்டைப் பெற்றுள்ளன.
தூத்துக்குடி
மழையோடு போராடி மக்களை பாதுகாக்கும் மேயர் ஜெகன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ அவசர வேண்டுகோள்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு உடனடி செயல்பாடு அவசியம்!!
அடுத்த
“மழைநீருக்கும் மேயர் ஜெகன் பெரியசாமிக்கும் நடந்த அரை இரவுக் கவுரவக் குரல் பேச்சு!”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026