தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழையால் மழைநீர் நகருக்குள் நுழைய முயன்றது. ஆனால் நகரின் வாசலில் ஒரே ஒருவரே விழித்திருந்தார் மேயர் ஜெகன் பெரியசாமி. அவருக்கும் மழைநீருக்கும் இடையில் நடந்த “அரை இரவுக் கொந்தளிப்பு பேச்சு” தான் இன்று நகரம் முழுவதும் பேசப்படும் தலைப்பு.
மழைநீர் : “சார்… கொஞ்சம் வழி விடுங்க… நகருக்குள் வரணும்!”
இரவு 1 மணிக்கு, எல்லோரும் தூங்கியிருந்த நேரத்தில், ஓடைகளில் சத்தமிட்டு மழைநீர் நகருக்குள் புகும் முயற்சியில் இருந்தது.
அது மெதுவாக குரல் கொடுத்தது போல “சார்… நாங்க புறநகர்ல இருந்து வர்றோம்… இங்க ரெண்டாம் ஸ்ட்ரீட்ல, ஹவுசிங் போர்ட்ல கொஞ்சம் உளறிட்டு போயிட்டோம்… கொஞ்சம் இடம் விடிங்க. நகருக்குள் செல்வோம்…”
மேயர் ஜெகன் : “முடியாது! தூத்துக்குடி மக்களுக்கு நிம்மதி தான் முக்கியம்!”
அந்த நேரத்தில், தூக்கமே இல்லாமல் கண் விழித்து நின்ற மேயர் ஜெகன் பெரியசாமி, மழைநீரிடம் சொன்னார் “இல்ல! ஒரு துளி கூட நகருக்குள் அனுமதிக்க முடியாது! நகரம் தூங்குது… மக்கள் நிம்மதியா இருக்கணும்… நீங்க வேற வழி பாத்துக்கோங்க!”
மழைநீர் அதிர்ச்சியடைந்து “சார்… நாங்க வர்றதும் இயற்கைதான்…”
மேயர் புன்னகையுடன் “இயற்கை ஆனா கெடுதல் ஆகக்கூடாது! வடிகாலும், மோட்டருமா உங்களை புறநகரில் இருந்து வெளியே அனுப்புறோம்! நகருக்குள் கடந்து போகனும்ன்னா அது முடியாது!”
மழைநீரின் அப்பீல் : “சார் எங்களால் பாதிப்பு வராது… கொஞ்சம் அனுமதி…”
மழைநீர் கொஞ்சம் கெஞ்சினது “சார்… நாங்க வர்றதும் தப்பில்ல, நேரத்துல போயிடுவோம்…”
மேயரின் இறுதி நிபந்தனை : “மக்களின் வீட்டுக்குள் நீர் போகக் கூடாது!”
மேயர் ஜெகன் சத்தமாக “அது முடியாது! மக்கள் தூங்குறாங்க… காலையில எழும்போது ஒரு துளி நீர் கூட உள்ளே இருக்கக் கூடாது!”
மழைநீர் நொந்துப் போய் “அப்போ சரி சார்… நாங்க வேற திசையில போறோம்…” என்று ஏமாற்றத்துடன் பின்வாங்கியது.
காலை எழுந்த தூத்துக்குடி மக்கள் : “இரவு எந்த மழையும் உள்ளே வரலையே?”
காலையில மக்கள் கண் திறந்தபோது “நீர் தேங்கவில்லையே… எப்படி?”
என்று பிரமித்தனர்.
அதற்குப் பின்னால் இருந்தது
இரவு பகலென பாராமல் போராடிய மேயர் ஜெகன் பெரியசாமியும் அவரது குழுவும்!
மழைநீரும் சொல்லி சென்றதாகப் பேசப்படுகிறது
“தூத்துக்குடிக்கு ஜெகன் பெரியசாமி மாதிரி காவலன் இருந்தா நாங்க உள்ளே போவது கனவில கூட முடியாது!”
தூத்துக்குடி
“மழைநீருக்கும் மேயர் ஜெகன் பெரியசாமிக்கும் நடந்த அரை இரவுக் கவுரவக் குரல் பேச்சு!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழையோடு போராடி மக்களை பாதுகாக்கும் மேயர் ஜெகன்!!
அடுத்த
கொட்டும் மழையிலும் பொன்னாண்டி நகர் மழை நிலையை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026