உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி தமிழ்த்துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட (NSS) இயக்கம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை (17.07.2026) சிறப்பாக நடத்தின.



நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. விஷுமகாஜன் தலைமை வகித்தார். தூய மரியன்னை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சிபனா, கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், தூத்துக்குடி ஊரக மருத்துவ நலப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் பொன் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம், குடும்ப நலன், குழந்தைகளுக்கு இடையே போதிய இடைவெளி கடைப்பிடிப்பதன் அவசியம் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு. விஷுமகாஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவிகள் மக்கள் தொகை கட்டுப்பாடு, தாய்-சேய் நலம், குடும்ப நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.



உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பொதுமக்களிடையே மக்கள் தொகை விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.