பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் சிறப்பு பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, "லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்" என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழியாக கையெழுத்திட்டு, ஊழலற்ற சமூகத்தை உருவாக்கும் உறுதியை வெளிப்படுத்தினர்.



இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.



இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்கொடி, மைக்கேல் குரூஸ், இக்னேஷியஸ், தனலட்சுமி, பேச்சியம்மாள், பேறையா, முத்து, பிரபு, காமராஜ் மற்றும் தேசியத் தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காமராஜருக்கு மரியாதை செலுத்தினர். காமராஜரின் நேர்மை, எளிமை மற்றும் மக்கள் சேவை என்ற உயரிய பண்புகளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.