கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளிகள் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் டி.ஜி. பவுண்டேஷன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை இன்று (15.07.2026) எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தின.



நிகழ்ச்சிக்கு எஸ்.ஏ.வி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் சொர்ணலதா தலைமை வகித்தார். பழைய மாணவர்கள் சங்கத் தலைவர் டி.எம். நடேசன், செயலாளர் ஏ. மோகன், பொருளாளர் ஐ. அருள்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மத்திய அரசு வழக்கறிஞர் எஸ். சண்முக சுந்தரம் கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். சங்கத்தின் துணைச் செயலாளரும் முகாம் ஒருங்கிணைப்பாளருமான சந்தான கிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.



நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர்கள் ஹரிஹர கிருஷ்ணன், சண்முகராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன், தலைமையாசிரியை உமாதேவி, ஜாஸ்மின் தங்கம், துணைச் செயலாளர்கள் ரிசிகேஷன், ரகீம் சுனைதர், அமைப்புச் செயலாளர்கள் சுப்பு ராஜ், ராமசந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.



முகாமில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர். தேவையானவர்களுக்கு மேல்சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இறுதியாக சங்கத்தின் துணைச் செயலாளர் அந்தோணி தனுஸ் பாலன் நன்றியுரை வழங்கினார்.



கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த இலவச கண் சிகிச்சை முகாம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.