பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதுக்கோட்டை சிவந்தி ஆதித்தனார் மன்றம் முன்பு சிறப்பு விழா நடைபெற்றது.
வட்டார காங்கிரஸ் தலைவர் அபிஷேக் திவாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ஏசுவடியன், மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன், புதுக்கோட்டை காங்கிரஸ் தலைவர் டேனியல், நிர்வாகிகள் முருகன், உலகநாதன், அந்தோணிராஜ், அந்தோனிப்பிச்சை, மரிய பாஸ்கர், வேல்நடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும் பங்கேற்று பெருந்தலைவர் காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.