கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் கு. காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதியம்புத்தூர் பேருந்து நிலையத்தில் சமத்துவப் பெருவிழா மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு, அவரது கல்விச் சேவை, எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலப் பணிகள் நினைவுகூரப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, காமராஜரின் கொள்கைகளைப் பின்பற்றுவோம் என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.



நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர்கள் தங்கச்சாமி, வேலாயுதசாமி, விவசாய மாவட்டத் தலைவர் பேரையா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மொட்டசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சியை ஒட்டப்பிடாரம் மத்திய வட்டாரத் தலைவர் A.X. ஜேம்ஸ் லாரன்ஸ் மற்றும் புதியம்புத்தூர் நகரத் தலைவர் S.K.M. துரைமணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஜா, தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிர்மல், ஒன்றிய செயலாளர் கனகராஜ், நகரச் செயலாளர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டு காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.



மேலும் மதிமுகவைச் சேர்ந்த வேலுச்சாமி, ராஜேந்திரன், ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பழனி, மாடசாமி ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் புதியம்புத்தூர் நிர்வாகிகளான சந்திரபோஸ், செந்தில், கார்த்தி, சீனிவாசன், ஆண்ட்ரூஸ், கணேஷ், மகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளான ராமசாமி, ஆத்தியப்பன், ராமகிருஷ்ணன், கணேசன், பாஸ்கர், தனராஜ், நல்லசாமி, டேவிட், பேச்சிமுத்து, ராஜா, அருண்முத்து உள்ளிட்டோர் மற்றும் கூட்டணிக் கட்சியினர், கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காமராஜரின் மக்கள் நலக் கொள்கைகளை எடுத்துரைக்கும் வகையில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இறுதியாக, பெருந்தலைவர் காமராஜரின் வழியில் சமத்துவம், கல்வி வளர்ச்சி மற்றும் மக்கள் சேவையை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் உறுதியேற்று, நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.