பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து, "லஞ்சம் ஒழி – ஊழலை ஒழிப்போம்" என்ற விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தும் வகையில், லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்வமுடன் பங்கேற்று கையெழுத்திட்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.



நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. பெருமாள்சாமி தலைமை வகித்தார். இதில் நகரத் தலைவர் கே.டி.பி. அருண்பாண்டியன், வட்டாரத் தலைவர் ரமேஷ்மூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜாராம், மாவட்ட பொதுச் செயலாளர் (INTUC) ராஜாசேகரன், மாவட்ட செயலாளர் துரைராஜ், எஸ்.எம்.டி.எஸ். ராஜா, எஸ்.சி./எஸ்.டி. பிரிவு துணைத் தலைவர் மாரிமுத்து, ஆழ்வார்சாமி, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் வேணுகோபால், வட்டாரத் தலைவர் செல்லதுரை, சுடலைமணி, ஆறுமுகம், பிரபாகரன், ராகுல் முருகன், காளியப்பன், காளிராஜ், நல்லமதி, வேல்சாமி, கோபால், சண்முகவேல், பிச்சைகனி, அந்தோணிமுத்து, கிருபாகரன், அய்யாசாமி, பழனிசாமி, ஆல்வின், பொம்மி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.