தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர்–மிளகுநத்தம் செல்லும் சாலையில் கல்லாற்றின் குறுக்கே நீண்டகாலமாக நிலவி வந்த பாலம் அமைப்பு கோரிக்கை நிறைவேறுகிறது. கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.23 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்கு விளாத்திகுளம் MLA G.V. மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்வில் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், எப்போதும்வென்றான் சோலைசாமி, திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் அரிபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன், குதிரைகுளம் வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆனந்த், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சண்முகையா, சந்திரகிரி, கிளைச் செயலாளர்கள் மூக்கையா, பெருமாள், லட்சுமணன், கணேசன், கிளை அவைத்தலைவர் மாதவன், கிளை பிரதிநிதிகள் அதிலிங்கராஜ், முத்துகணேசன், மாணவரணி முத்து, இருளப்பன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் எப்போதும்வென்றான் அரசு ஆரம்பப்பள்ளியில் நடைபெற்று வரும் பாக எண்கள் 107, 108, 109 ஆகியவற்றுக்கான SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமையும் MLA G.V. மார்கண்டேயன் நேரில் பார்வையிட்டார்.
இந்த பார்வையின்போது ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி முத்துராஜ், சோலைசாமி, முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆனந்த், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகையா, சந்தனராஜ், கிளைச் செயலாளர்கள் பெருமாள், லட்சுமணன், கணேசன், தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் முன்னெடுத்த பெரிய முன்னேற்றம் — 50 ஆண்டு கனவான பாலம் பணி தொடக்கம்; வாக்காளர் சேவைகளும் கண்காணிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் : தேர்வானவர்களுக்கு கனிமொழி கருணாநிதி நியமன ஆணைகள் வழங்கல்!!
அடுத்த
கே.கே.ஆர். ஜெயக்கொடி நேரில் ஆய்வு – கோரம்பள்ளம் SIR சிறப்பு வாக்காளர் திருத்த முகாம் சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026