தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆகியோரின் ஆணைப்படி, மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா ஆலோசனையின் படி, கோரம்பள்ளம் ஊராட்சி பூத் எண் 241, 242, 243-ல் SIR சிறப்பு வாக்காளர் திருத்த முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்கொடி (KKR ஜெயக்கொடி) மற்றும் தூத்துக்குடி மத்திய ஒன்றிய பார்வையாளர் வழக்கறிஞர் பூங்குமார் நேரில் சென்று முகாம் செயல்முறைகளை விரிவாக ஆய்வு செய்தனர்.
வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் சரியாக நிரப்பப்படுகிறதா, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து பரிசோதனை மேற்கொண்டனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்று பணிகளை ஒருங்கிணைத்தனர். வாக்காளர் பட்டியல் துல்லியமாக புதுப்பிக்கப்படும் நோக்கில் நடைபெற்ற இந்த ஆய்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தூத்துக்குடி
கே.கே.ஆர். ஜெயக்கொடி நேரில் ஆய்வு – கோரம்பள்ளம் SIR சிறப்பு வாக்காளர் திருத்த முகாம் சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் முன்னெடுத்த பெரிய முன்னேற்றம் — 50 ஆண்டு கனவான பாலம் பணி தொடக்கம்; வாக்காளர் சேவைகளும் கண்காணிப்பு!!
அடுத்த
“கலையின் கதைகள் – மனிதர்களின் நினைவுகளை பொக்கிஷமாகப் பாதுகாக்கும் முனைவர் மா. சங்கர்”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026