நாடு முழுவதும் தலித், பழங்குடியினர் மற்றும் பெண்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களை கண்டித்தும், அதற்கு துணை போகும் ஒன்றிய மொடி அரசைக் கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுவின் சார்பில் நேற்று (18.11.2025) செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகரச் செயலாளர் தோழர் ஜி. தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் மருத்துவர் அறம் சிறப்புரையாற்றி, சமூக நீதி மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், அதற்கு எதிராக மக்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மாவட்டச் செயலாளர் தோழர் பி. கரும்பன், உதவி செயலாளர்கள் வி. பாலமுருகன், ஜி. பாபு, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி. ஞானசேகர், மாவட்ட அலுவலக செயலாளர் எஸ். மாடசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அந்தோணி சௌந்தர்ராஜன், மனோன்மணி, செந்தில், ஆறுமுகம், விஜயலட்சுமி, பொன்னுச்சாமி, அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.
AITUC மாவட்டச் செயலாளர் லோகநாதன், தலைவர் கிருஷ்ணராஜ், விஜயகுமார், இசக்கி பாலசிங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க, வெகுஜன அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், கணிசமான பெண்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வலுப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நாட்டில் நிலவும் சமூக அநீதி, பெண்கள் மீதான வன்முறை, தலித் மற்றும் பழங்குடியினரின் உரிமை மீறல்கள் குறித்து மத்திய அரசை எதிர்த்து தீவிரக் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது.
தூத்துக்குடி
தலித்-பழங்குடி, பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் நாயுடு மகாஜன சங்கம் மனு — போலி பட்டா விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதி!!
அடுத்த
தமிழகத்தில் நூலகச் சேவையை உயர்த்திய முன்னோடிகளுக்கு மாநில அரசு விருதுகள் வழங்கப்பட்டன!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026