தூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கீழக்கூட்டுடன் காடு ராஜுவ்நகர் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் திருமதி பிரிஸ்கா, இடைநிலை ஆசிரியர்கள் லியோலினா, வசந்தா ஆகியோர் தலைமையில் விழா தொடங்கியது.
புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கணபதி, தலைமை காவலர் சிவபெருமாள், காவலர்கள் சுடலை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் ‘மரம் வரம்’ அறக்கட்டளை செயலாளர் திரு. ஆனந்த் அவர்களும் பங்கேற்று, மாணவர்களுக்கு இனிப்புகள், பென்சில்கள், உண்டியல்கள் வழங்கினர்.
மரம் வரம் அறக்கட்டளை தலைவர் ராஜன், பொருளாளர் செல்வராஜ், சட்ட ஆலோசகர் கணேஷ் பத்மநாபன், அருண்குமார், செல்வம் ஆகியோர்கள் சார்பில் பள்ளிக்கு புங்கை, வேம்பு, வாதுமை, சொர்க்கம், சரக்கொன்றை, நாகலிங்கம், மகாக்கனி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பள்ளிக்கு வந்திருந்த மருத்துவ குழுவினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஷண்முகசுந்தரம், மாணவ–மாணவிகள், காவல்துறையினர் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர்கள் மற்றும் ‘மரம் வரம்’ உறுப்பினர்களான ராமன், பாண்டி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஊராட்சி பள்ளியில் குழந்தைகள் தின விழா: மாணவர்களுக்கு இனிப்புகள், கல்வி பொருட்கள் – பள்ளிவளாகத்தில் மரக்கன்று நட்டும் நிகழ்ச்சி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அண்ணா பழைய பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் “தியாகத் திருநாள்” வழிபாடு – வ.உ.சிதம்பரனாருக்கு மாநிலம் முழுவதும் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026