கர்மவீரர், கல்விக்கண் திறந்த முன்னாள் முதலமைச்சர் கு. காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் இன்று (15.07.2026) புதன்கிழமை காலை 10 மணியளவில், தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் பூவை எம். ஜெகன் மூர்த்தி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) அவர்களின் ஆணைக்கிணங்கவும், பொதுச் செயலாளர் டி. ருசேந்திரகுமார் மற்றும் மாநில செயலாளர் பரணி பி. மாரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சமூக போராளி மா. மாரிச் செல்வம் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் எஸ். ஜெரினா பானு, கே. அருள் தாஸ் நாடார், ஏ. மைக்கேல்ராஜ், டி. வேலம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்புக்கு: 93633 17545
செய்தி வெளியீடு:
புரட்சி பாரதம் கட்சி, தூத்துக்குடி மாநகர் மாவட்டம்.