சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, உறுப்பினர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஆண்டு தோறும் பாரம்பரியமாக நடைபெறும் இந்த பூஜை விழாவை முன்னிட்டு, நாளை (அக்.1) நடைபெறும் பூஜைக்கான முன்னேற்பாடுகள் இன்று உற்சாகமாக நடைபெற்றன.
பத்திரிகையாளர்கள் அனைவரும் இணைந்து விழாவை சிறப்பிப்பதற்காக, பிரஸ் கிளப் நிர்வாகம் சார்பில் உறுப்பினர்களுக்கு 12 வகை பூஜைப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதில் அச்சு வெல்லம், பச்சரிசி, கொண்டைக்கடலை, பொரி, அவல், பொரிகடலை, ஏலக்காய், முந்திரி, கிறிஸ்மஸ் பழம், சந்தனம், விபூதி, குங்குமம் ஆகியவை அடங்கின.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையேற்றனர். கௌரவ ஆலோசகர்கள் அன்பழகன், அருண், ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டன.
செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமன், மாரி ராஜா, கண்ணன், லட்சுமணன், இருதயராஜ் ஆகியோரும், உறுப்பினர்கள் ஜாய்சன், ராமச்சந்திரன், கற்பகநாதன், இசக்கி ராஜா, மாரிமுத்து, பாலகிருஷ்ணன், ரமேஷ், சேகர், சூர்யா, சந்தன ரமேஷ், முத்துக்குமார், அருள்ராஜ், நடராஜன், கார்த்திகேயன், ஜெயராமன், நீதி ராஜன், மாணிக்கம், செய்யது அலி சித்திக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நடந்த இந்நிகழ்ச்சி, பத்திரிகையாளர்களுக்கு இனிய பரிசுத் தொகுப்பாக மட்டுமல்லாமல், ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வண்ணம் நடைபெற்றது.
தூத்துக்குடி
“12 வகை சிறப்பு பூஜைப் பொருட்களுடன் பத்திரிகையாளர்களுக்கு இனிய அன்பளிப்பு – தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியின் வாகனப் பணிமனைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நேரடி பார்வை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026