தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிப் பாதையை வேகப்படுத்தும் வகையில் தினமும் 18 மணி நேரம் அயராது பணியாற்றி வருவது மேயர் ஜெகனின் தனித்துவமான பணிப்பற்று. மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் ஆலோசனைகளை முன்னிலையாக கொண்டு, தூத்துக்குடி எந்த திசையில் முன்னேற வேண்டும் என்பது குறித்து தெளிவான திட்டத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
28 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தெப்பக்குளம் – ஜெகனின் நேரடி கவனம்
மாநகரின் மையத்தில் இருந்தும் 28 ஆண்டுகளாக எந்த சீரமைப்பும் செய்யப்படாத தெப்பக்குளத்தை, பொதுமக்களின் கோரிக்கையை மதித்து, மேயர் ஜெகன் தானே நேரில் பார்வையிட்டு நவீனமயப்படுத்தும் முயற்சியை தொடங்கினார். ரூ.75 லட்சம் மதிப்பில் நடைமேடை, பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட பல மேம்பாட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
நடு இரவில் ஏற்பட்ட விரிசல் – உடனடியாக தளத்தில் மேயரின் பாய்ச்சல்
நடைமேடை பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட பெரிய விரிசல் காரணமாக சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவானது. இரவு நேரம் என்றாலும், தகவல் அறிந்த உடனே மேயர் ஜெகன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கிருந்த பொதுமக்களிடம் நிலைமையை கேட்டறிந்து, அதிகாரிகளுடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.
காலை அவசர ஆலோசனை – நிபுணர்கள் வருகை
வியாழக்கிழமை காலை மாநகராட்சி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, சேதத்தை எவ்வாறு சரி செய்வது என்று முடிவு செய்தார். பின்னர் அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தொழில்நுட்ப பரிந்துரைகளின் அடிப்படையில் சீரமைப்பு திட்டம் வடிவமைக்கப்பட்டது.
மீண்டும் இரவு ஆய்வு – விபத்து மீண்டும் வராத தீர்மானம்
செய்யப்படும் சீரமைப்பு பணிகள் பாதுகாப்பானவையாக இருக்கவேண்டும் என்ற நோக்கில், வியாழக்கிழமை இரவும் மேயர் ஜெகன் தளத்திற்கு சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் இரவு நேரம் வரை தளத்தில் இருந்து பணிகளை கண்காணித்து வந்தனர்.
தூத்துக்குடிக்காக 18 மணி நேர உழைப்பு
பதவியேற்ற முதல் நாள் முதல்—
24 மணி நேரத்தில் 18 மணி நேரம் மக்களுக்காகவே உழைப்பு…
ஓய்வு 6 மணி நேரம் மட்டும்…
இந்த அளவிலான பணிப்பற்று, திமுக தலைமை தன்னிடம் வைத்துள்ள நம்பிக்கையை செயல்மூலம் நிரூபிக்கும் விதமாக உள்ளது.
தூத்துக்குடி நகரின் முன்னேற்றத்திற்கு ‘செயலால் பேசும் தலைமை’ என்ற புதிய அடையாளத்தை மேயர் ஜெகன் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முன்னேற்றத்தின் மறுபெயர்: செயலால் பதிலளிக்கும் மேயர் ஜெகன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தெப்பக்குளத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் – அண்ணா பல்கலைக்கழக நிபுணர் ஆய்வுக்கு பின் பாரம்பரியம் காக்கப்படும் சீரமைப்பு: மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
அங்கன்வாடி சிறார்களுடன் இனிய தருணம் — தூத்துக்குடியில் புதிய அங்கன்வாடி மையம் திறந்து வைத்த அமைச்சர் கீதா ஜீவன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026