ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவர் ஜெ. ஐவஹர். தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் மறைந்த த. வெள்ளையனின் முதலாமாண்டு நினைவு நாள் புதன்கிழமையான நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் பிரதான பஜாரில், தாளமுத்து நகர் வட்டார வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ஆர். முத்துக்கனி தலைமை வகித்தார். செயலர் எஸ். கிராஸ், பொருளாளர் எம். அந்தோணி சௌந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவர் ஜெ. ஐவஹர் கலந்துகொண்டு, வெள்ளையன் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு சங்கத் தலைவர் ஆனந்த் சேகரன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் ஜெபஸ்டியான், வேல்முருகன், செல்வராஜ், ஐசக் மற்றும் தாளமுத்து நகர் வட்டார வியாபாரிகள் நலச் சங்க துணைத் தலைவர்கள் குருசாமி, முத்து, துணைச் செயலர்கள் பஷீர், தங்க மாரியப்பன், சட்ட ஆலோசகர் எஸ். அய்யாதுரை, ஆலோசகர்கள் பாஸ்கர், அந்தோணி மிக்கேல், மனுவேல்பாண்டியன், கனகராஜ், குணா பாஸ்கர், ஜான்சன், மாடசாமி, சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் மறைந்த த. வெள்ளையனின் முதலாமாண்டு நினைவு நாள் கடைப்பிடிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மேயர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!!
அடுத்த
புதிய தார் சாலை மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026