தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் அண்ணா பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சில கடைக்காரர்கள் கடை முன்பகுதியில் 5 அடி வரை கவுண்டர்கள் அமைத்து பொருட்களை குவித்ததன் காரணமாக பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் செல்வதற்கே இடையூறு ஏற்பட்டது.
இதைப் பற்றிய புகார்கள் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்காவிடம் வந்ததை அடுத்து, அவரது உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கவுண்டர்கள், பொருட்கள் மாநகராட்சி வாகனங்களில் ஏற்றி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடைக்காரர்களிடம் கடுமையாக எச்சரித்த உதவி ஆணையர் வெங்கட்ராமன்,
“பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்தால், அப்படி கடைகள் எங்களுக்கு தேவையில்லை; சுவர் கட்டி அதை பயன்படுத்தி விடுவோம்!”
என்று கூறி கடைக்காரர்களை எச்சரித்தார். இதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் நடத்தும் கடைகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் நோக்கி செல்லும் பேருந்து நிறுத்தங்களின் அருகிலுள்ள கடைகள் முன்பகுதியிலும் பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தது. அகற்றும் பணியின் போது சில கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள்,
“வாக்குவாதம் செய்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்!” என்று எச்சரித்தனர். ஆக்கிரமிப்பு பொருட்கள் அனைத்தும் மாநகராட்சியின் குடோனில் வைக்கப்பட்டு, இனி ஆக்கிரமிப்பு செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் சில கடைக்காரர்களிடம் வாடகை செலுத்தாமல் இருப்பின் கடையை காலி செய்யுமாறும் உத்தரவு வழங்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பதவி ஏற்றதிலிருந்து தூத்துக்குடி மாநகராட்சியில் பல அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்ணா பேருந்து நிலையத்தில் ஏற்பட்டிருந்த பொதுமக்கள் புகார்களுக்கு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.
“இனி பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு சிரமமின்றி இருக்கும் வகையில், மாநகராட்சி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
பொதுமக்களுக்கு இடையூறு என்றால் கடைகள் தேவையில்லை – அண்ணா பேருந்து நிலையத்தில் அதிரடி நடவடிக்கை!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் சாலைப் பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் கீதாஜீவன்!!
அடுத்த
தூத்துக்குடியில் நவம்பர் 11ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – “தேர்தல் ஆணையம் பாஜக கைப்பாவை!” – அமைச்சர்கள் பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கூட்டு அறிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026