தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்நத்தம் எப்போதும்வென்றான் இடையே ரூ.4 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் துவக்கமிடப்பட்டன. இப்பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா, ஆதிசங்கர், மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் ராமசாமி, மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளிராஜ் பாண்டியன், கிளை செயலாளர்கள் சுப்புராஜ், தாமோதரன், எட்டையாபுரம் பேரூர் கழக வார்டு செயலாளர் அருள்சுந்தர், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா, பாக்கு டிஜிட்டல் ஏஜென்ட் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிங்கிலிபட்டியில் அவைத்தலைவர் துரைராஜ் நாயக்கர் மறைவிற்கு அஞ்சலி
விளாத்திகுளம் வட்டம் சிங்கிலிபட்டி கிராமத்தில் மதிமுக மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் துரைராஜ் நாயக்கர் மறைவிற்கு G.V. மார்கண்டேயன் அஞ்சலி செலுத்தினார். உடன் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குமாரகிரியில் முன்னாள் கிளை செயலாளர் சீனிவாசன் மறைவிற்கு அஞ்சலி
விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் குமாரகிரி கிராமத்தில் முன்னாள் கிளை செயலாளர் சீனிவாசன் மறைவிற்கும் G.V. மார்கண்டேயன் அஞ்சலி செய்தார். உடன் ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜேக்கப் மறைவிற்கு அஞ்சலி
விளாத்திகுளம் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜேக்கப் மறைவிற்கும் G.V. மார்கண்டேயன் அஞ்சலி செலுத்தினார். உடன் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
விளாத்திகுளம் சுற்றுவட்டாரத்தில் சாலை மேம்பாட்டு பணி துவக்கம் – பலர் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்த மார்கண்டேயன் எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“புதியம்புத்தூரில் தொடங்கிய விடியல் சேவை… அதே பேருந்தில் எம்எல்ஏ பயணம் – ஓட்டப்பிடாரத்தில் மக்களை ஆச்சரியப்படுத்திய தொடக்கம்!”
அடுத்த
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி புதிய கிளை திறப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026