தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச் சங்கத்தின் 21வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் பல்நோக்கு கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஆண்டுவிழா மாணவிகள் அர்ச்சனா, சுப்ரியா வழங்கிய இறைவணக்கத்துடன் தொடங்கியது. செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரை வழங்க, சங்கத் தலைவர் தங்கராஜா தலைமை உரையாற்றினார். கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முரளி சிறப்புரை ஆற்றினார்.
ஆண்டு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் சுப்புலட்சுமி பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் சண்முகராஜ் நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் சண்முகசுந்தரம் வரவு செலவு அறிக்கையை முன்வைத்தார். பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் :-
தலைவர் : தங்கராஜா
செயலாளர் : தமிழ்ச்செல்வன்
பொருளாளர் : சண்முகசுந்தரம்
துணைத் தலைவர் : சண்முகராஜ்
துணைச் செயலாளர்கள் : நாகராஜ், ஹேமலதா
புரவலர் : டேவிட்சன்
புதிய செயற்குழு உறுப்பினர்களாக கென்னடி, ஜீவா பாண்டியன், முத்துராஜ், வீரப்பெருமாள், காசிக்கனி, மாரியப்பன், சுப்புராஜ் என்ற கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
விழா நிறைவில் வத்சலா தேவி நன்றி கூறினார்.
தூத்துக்குடி
முத்தம்மாள் காலனி பொதுநலச் சங்க ஆண்டு விழா – புதிய நிர்வாகிகள் தேர்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
அடுத்த
உலகின் முன்னணி 2% விஞ்ஞானிகளில் வ.உ.சி கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் செல்வம் – தமிழ்நாட்டில் நிலத்தியல் துறையில் முதலிடம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026