ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியதுடன்,

தமிழ்நாட்டிற்கு 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 15,516 கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்து வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை,

சென்னை விமான நிலைய அண்ணா பன்னாட்டு முனையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பொன்னாடை வழங்கி வரவேற்றார்.