தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டம் வரும் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாள் விழா, வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை, எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில், தனது தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உள்ள திமுக மகளிரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கழகத்தின் அமைப்பு வலுப்படுத்தல், மகளிரணி செயல்பாடுகள் மற்றும் தேர்தல் பணிகளில் மகளிரணியின் பங்கு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாகவும், அனைவரின் ஒத்துழைப்புடன் கழக வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
கனிமொழி பிறந்தநாள் விழா, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு – 16ம் தேதி தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பெண்களுக்கு இரட்டைப் பேருதவி: 4042 பேருக்கு 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை — அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினர்!!
அடுத்த
கண்ணுக்கு ஒளி, வாழ்வுக்கு வெளிச்சம்! – தூத்துக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம் வெற்றி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026