பெருந்தலைவர், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை தெச்சனமாற நாடார் சங்கம் தூத்துக்குடி கிளை சார்பில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் அருகில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திருஉருவ சிலைக்கு சங்கத்தின் டைரக்டர்கள் கே. லிங்கசெல்வன் மற்றும் கே.கே.ஆர். ஜெயக்கொடி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பெருந்தலைவர் காமராஜரின் கல்விப் பணிகள், எளிமையான வாழ்க்கை முறை, மக்கள் நல ஆட்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் நினைவுகூரப்பட்டன. பின்னர் பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தங்க மாரியப்பன், குமரகுருபரன், பொன்னரசு, சூரியகுமார், சௌந்தர்ராஜன், செல்வின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.