தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரம் நடும் பசுமை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் ஐஸ்வர்யா, வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அய்யனடைப்பு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 56 மரக்கன்றுகள் நடப்பட்டன. பசுமை வளர்ச்சியின் அவசியம் குறித்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் கிளை அலுவலகம் ஆழ்வார்தோப்பு தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், வனச்சரகர் பாபு, வன அலுவலர் ஜெயக்குமார், அய்யனடைப்பு கிராம உதவியாளர் சீனிவாசன், பசுமை தோழர் சந்தன சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இந்த பசுமை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை, கோத்தாரி இன்டஸ்ட்ரியல், எக்னோரா நிறுவனம் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனங்கள் இணைந்து செய்திருந்தன.
தூத்துக்குடி
அய்யனடைப்பில் பசுமை விழா: 56 மரக்கன்றுகள் நடவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநகராட்சி வாகன காப்பகத்தில் இருசக்கர வாகனம் திருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் வாகன உரிமையாளர்கள் அச்சம்!!
அடுத்த
முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி மனுக்கள் மீது தீர்வு – பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026