தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழை தொடர்பான எந்தவொரு குறைபாடையும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 203 0401-ல் எந்த நேரமும் பதிவு செய்யலாம் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் நீர் தேங்கக்கூடிய பகுதிகள் அனைத்திலும் அதிகாரிகளுடன் இணைந்து நேரடியாக பார்வையிட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஓடைகள் மற்றும் வடிகால்களில் வடிநீர் முழு திறனுடன் சென்று கொண்டிருக்கிறது. மேலும் புறநகர் பகுதிகளிலிருந்து மாநகரக்குள் இதுவரை எந்த மழைநீரும் வராத நிலையில், தற்போது தேங்கியுள்ள மழைநீர் மழை குறைந்தவுடன் படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்தார்.
மழை பாதிப்புகள் அல்லது அவசர தேவைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் கட்டணமில்லா எண் – 1800 203 0401 மற்றும் மேயர் அவர்களின் நேரடி தொலைபேசி எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறினார்.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் முழு நேர பணியில் ஈடுபட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மக்களுக்கு அவசர உதவி எண் – “1800 203 0401” – மேயர் ஜெகன் அறிவிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மழை சவால்களை சமாளிக்க அனைத்துத் துறைகளும் தயார் — அமைச்சர் கீதாஜீவன் உறுதி!!
அடுத்த
மழைநீர் வெளியேற்ற பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026