திருநெல்வேலி, 25.11.2025 – மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் "MY BHARATH KHENDRA" சார்பில் “Let us Walk for Unity, Rise for Nation” என்ற தேசியொற்றுமை நடைபயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்டம் சாரா டக்கர் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி உதவி மாவட்ட ஆட்சியர் தவ்லேந்து, காவல் துறை உதவி ஆணையர் வினோத் சந்தாரம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Dr. வேலியப்பன் மற்றும் சாரா டக்கர் கல்லூரி முதல்வர் பெலிசியா கிளாடிஸ் சத்யா தேவி கலந்து கொண்டு வழிநடத்தினர்.
விழாவில் தூத்துக்குடியைச் சேர்ந்த முனைவர் சகா. மா. சங்கர் அவர்களின் கலைத் தொடர் மற்றும் கிராமிய கலைப்பணி பாராட்டப்பட்டது. அவரின் பங்களிப்பை மதிப்பளிக்கும் வகையில் உதவி மாவட்ட ஆட்சியர் தவ்லேந்து விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சகா கிராமிய கலைக்குழுவினரின் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மாடாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் மற்றும் கிராமிய பாடல்கள் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம்பெற்றன.
நாட்டு ஒற்றுமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் உறுதிமொழியையும் மாணவர்கள் அனைவரும் எடுத்துக்கொண்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.
தூத்துக்குடி
முனைவர் சங்கர் கலையில் ஒற்றுமை வெளிச்சம் – “Let Us Walk for Unity, Rise for Nation” நிகழ்ச்சியில் பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேயர் ஜெகன் பெரியசாமி ஒருங்கிணைப்பில் மழைநீர் அகற்றம் துரிதம் – பணிகளை நேரில் கண்காணித்து வேகப்படுத்தும் கவுன்சிலர் ரெங்கசாமி!!
அடுத்த
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் & மூத்த குடிமக்கள் நல உதவி வழங்கும் முகாம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026