இந்திய அரசியலமைப்பு உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று (26.11.2025) அரசியலமைப்பு தின உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பின் மிகப்பெரிய பண்புகளான இறையாண்மை, சமூக நீதியை நிலைநாட்டுதல், சமய சார்பின்மை, மக்கள் ஆட்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், அதிகாரிகள் அனைவரும் ஒன்றுபட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அதில், தனிமனிதன் மாண்பு, தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி குடிமக்கள் அனைவரும் சமநிலை மற்றும் வாய்ப்புச் சமத்துவம் அடைய வேண்டும் என்பதையும் உறுதிபடுத்தினர். 1949 நவம்பர் 26 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட வரலாற்று சிறப்பையும் நினைவுகூரப்பட்டது.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தீபு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜமால் உட்பட காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி நிகழ்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சமூகப்பணிக்கு முன்னுதாரணம் — மரம் வரம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவில் மனிதநேய செயல்கள்!!
அடுத்த
தூத்துக்குடியில் புதன்கிழமைகள் மக்கள் குறைகள் கேட்கும் நாளாக மாறின!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026