தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மரம் வரம் அறக்கட்டளை நிறுவனர் ராமன் என்ற ராமகிருஷ்ணன் தனது 47வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல்வேறு சமூக நல செயல்களை மேற்கொண்டார்.
இன்று மதியம் தூத்துக்குடி டுவிபுரத்தில் உள்ள மகிழ்வகம் காப்பகத்தில் அன்னதானம் வழங்கி மகிழ்வகத்தில் தங்கி உள்ளவர்களுக்கு உணவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரத்த தானமும் செய்தார். குறிப்பிடத்தக்கது என்னவெனில், இது அவரின் 10வது ரத்த தானம் மற்றும் இந்த வருடத்தில் மட்டும் இரண்டாவது தடவை ரத்த தானம் செய்துள்ளார்.
அதேவேளை, புதுக்கோட்டை எல்ஐசி அலுவலகத்தில் LIC முகவர் சக்திவேல் முருகன் தலைமையில் ராமகிருஷ்ணனின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குமரகிரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, நாம் இந்தியர் கட்சி மாநில பொருளாளர் ஜெயகணேஷ், நாகராஜ், முத்து, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
சமூக நல சேவைகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ராமகிருஷ்ணனின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சமூகப்பணிக்கு முன்னுதாரணம் — மரம் வரம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவில் மனிதநேய செயல்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“இந்திய அரசியலமைப்பு தினம்: ஜனநாயகத்தின் மதிப்புகளை போற்றுவோம் — வக்கீல் ரமேஷ் பாண்டியன் வாழ்த்து”
அடுத்த
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி நிகழ்வு!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026