2026–27 நிதியாண்டுக்கான மத்திய யூனியன் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக தாக்கல் செய்த பட்ஜெட் ஆகும்; சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட்டாகும்.
‘ஆத்மநிர்பர் பாரத்’ கொள்கையை மையமாகக் கொண்டு உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, விவசாய வளர்ச்சி, வீடமைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அரிய வகை தாதுக்களுக்கான வழித்தடங்கள் அமைக்கப்படும் அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் அறிவிப்புகளின் தாக்கம் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முக சுந்தரம், சிவராமன், மாசாணம், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், ஓபிசி மாநில செயற்குழு உறுப்பினர் பால முருகன்,
மாவட்ட பொருளாளர் பரமசிவம், கிழக்கு மண்டல தலைவி ராஜேஷ் கனி, மற்றும் பாஜக அணி பிரிவு நிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்டு, மத்திய பட்ஜெட் தாக்கல் நிகழ்வின் நேரலை ஒளிபரப்பை பார்வையிட்டனர்.
தூத்துக்குடி
9வது முறையாக மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் – தேர்தல் மாநிலங்களை நோக்கி மத்திய அரசின் கவனம்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் பொதுச் செயலாளர் எடப்பாடியாரை முதல்வராக்க ஆதரவு திரட்டிய அதிமுக வர்த்தக அணி!!
அடுத்த
88வது மத்திய பட்ஜெட் நேரலை – தூத்துக்குடியில் பாஜக சார்பில் திரையிட்டு பொதுமக்கள் பார்வை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026